ரன்பீர் கபூர் நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியானது.
அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள இந்த படத்தில், ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
400 கோடி ரூபாய்க்கு மேலான செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில், 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலியா பட்: படத்தில் சம்பாதிப்பது எல்லாம் தூசு.. பிசினஸில் கோடிக்கணக்கில் புரளுகிறது..!
5% ஏற்றம் கண்ட பங்குகள்
இதற்கிடையில் தியேட்டர் பங்குகளான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் பங்குகள் இன்று காலை அமர்வில் 5% மேலாக ஏற்றம் கண்டு காணப்பட்டன. எனினும் முடிவில் 4% கீழாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
பிரம்மாஸ்திராவின் முதல் நாளே 75 கோடி ரூபாய் வசூலை எட்டியதாக கூறப்பட்டது.. இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாயினை தாண்டியதாகவும் கூறப்படுகின்றது.
கடும் போட்டி
இதற்கிடையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைப்பு குறித்து நாங்கள் கவனித்து வருகிறோம். இது நல்லதொரு லாபத்தினை தரலாம். ஓடிடி என பல டிஜிட்டல் தளங்கள் திரையரங்குகளுக்கு போட்டியாக அமைந்தாலும், திரையரங்களில் நல்ல லாபத்தினை கொடுக்கலாம். எனினும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து திரைப்படங்களை பார்க்க வைக்க வேண்டியது மிக அவசியமானது ஒன்று.
பங்குதாரர்களுடன் பேச்சு வார்த்தை
பிரம்மாஸ்திரம் போன்ற வலுவான படங்கள் இந்த துறையை மேலும் மேம்படுத்தும். இது வரவேற்கதக்க விஷயம். எனினும் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீடுகளை பெறுவார்களா? என்ற கேள்வியையும் நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
எனினும் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைப்பு குறித்தான பேச்சு வார்த்தை அக்டோபர் 11ம் தேதியன்று, அதன் பங்குதாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.
பிவிஆர் பங்கு நிலவரம்?
இதற்கிடையில் என்.எஸ்.இ-யில் பிவிஆர் பங்கின் விலையானது 3.58% அதிகரித்து, 1899.70 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 1928.45 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1885 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 3.63% அதிகரித்து, 1900.75 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1926.20 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1887 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 2211.55 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1224.70 ரூபாயாகவும் உள்ளது.
ஐநாக்ஸ் (INOX)
என்.எஸ்.இ-யில் ஐநாக்ஸ் பங்கின் விலையானது 4.10% அதிகரித்து, 514.20 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 521.35 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 510.50 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 3.76% அதிகரித்து, 513 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 521 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 510.85 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 622.30 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 299.25 ரூபாயாகவும் உள்ளது.
PVR, INOX shares jump on boost from brahmastra’s box office collection
Theater stocks PVR and INOX closed over 3% higher on the back of Brahmastra’s box office collection.