பொன்னியின் செல்வனை உதாசீனப்படுத்திவிட்டேன்… அசால்ட்டாக கூறிய அமலாபால்

தமிழ், மலையாளம் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தற்போது, அவர் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். ‘அமலா பால் புரொடக்ஷன்’ என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கிய அவர் தனது முதல் தயாரிப்பாக ‘கடாவர்’ என்ற திரைப்படத்தை எடுத்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இத்திரைப்படம், ஆக. 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படத்திற்கு பரவலான வரவேற்பு கிடைத்த நிலையில், தொடர்ந்து படங்களை தயாரிக்க அமலா பால் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பெண் மைய திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதை தவிர்த்து, வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில்,சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான் தவிர்த்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பான ஆடிஷனுக்கு, இயக்குநர் மணிரத்னம் தன்னை அழைத்ததாகவும், அதில்தான் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், திரைப்படம் திட்டமிடப்பட்டப்படி தொடங்கவில்லை என்றும் அதனால் மிகவும் கவலைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பின்னர் நீண்ட நாள்கள் கழித்து மீண்டும் அப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, அதில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது என்றும் எனவே, பொன்னியின் செல்வனில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த முடிவிற்காக தான் இப்போதுவரை வருத்தப்படவே இல்லை என்று கூறும் அவர், சில விஷயங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் பேசியுள்ளார். அதாவது, ‘நமக்கு வாழ்க்கையில் அனைத்திற்கும் ஒவ்வொன்றுடன் ஒரு தொடர்பிற்கும். அதன்படி, நடக்க வேண்டியது கச்சிதமாக நடக்கும். வாழ்க்கையில் சில விஷயம் நமது கண்ணோட்டத்தை பொறுத்துதான் அமைகிறது’ என அமலா பால் பேசியுள்ளார். 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப். 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத் குமார், பிரபு உள்ளிட்ட நட்சத்திர பட்டளாங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.