இந்தியா விமான நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும் நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய விமானங்களை இறக்கி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சமீபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கிய டாடா நிறுவனம் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்காக 25 ஏர் பஸ்கள் மற்றும் 5 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களின் போட்டியை ஏர் இந்தியா சமாளிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்கள்.. ஏர் இந்தியா அதிரடி திட்டம்
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் தனது திறனை அதிகரிக்க 25 ஏர்பஸ்கள் மற்றும் 5 போயிங் வைட்பாடி விமானங்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 25 ஏர்பஸ் நேரோ-பாடி மற்றும் 5 போயிங் வைட்-பாடி விமானங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவை 2022ஆம் ஆண்டின் இறுதியில் சேவையை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய விமானங்கள்
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சமிபத்தில் தனது சேவையை தொடங்கிய நிலையில் புதிய விமானங்களை சேவையில் இறக்க முடிவு செய்தது. இதனை அடுத்தே சமீபத்தில் 21 ஏர்பஸ் ஏ320 நியோக்கள், நான்கு ஏர்பஸ் ஏ321 நியோக்கள் மற்றும் ஐந்து போயிங் பி777-200எல்ஆர்கள் ஆகியவற்றை இணைத்தது.
இந்தியா-அமெரிக்கா
ஏர் இந்தியா நிறுவனம் அளித்த தகவலின்படி B777-200LR வகை விமானங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இணைக்கப்படும் என்றும், இந்திய மெட்ரோ நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் வழிகளில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை – சான்பிரான்சிஸ்கோ
குறிப்பாக மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் என தெரிகிறது. அதேபோல் பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு வாரத்திற்கு மூன்று விமானங்கள் இயக்கவும், இந்த விமானங்கள் முதல் முறையாக பிரீமியம் எகானமி ஹால் வசதியுடன் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர்
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியபோது, நான்கு A321 விமானங்கள் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏர் இந்தியாவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், 21 A320 2023 விமானங்கள் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பயணிகள் திருப்தி
புதிய விமானங்களை இணைப்பது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது: நீண்ட காலத்திற்கு பின் ஏர் இந்தியா தனது உலகளாவிய சேவையை மீண்டும் விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சி என்றும், இந்த புதிய விமானங்களின் திறன் முழுமையாக பயணிகளை திருப்தி செய்யும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
70 விமானங்கள்
ஏர் இந்தியா தற்போது 70 விமானங்களைக் கொண்டுள்ள நிலையில் அவற்றில் 54 சேவையில் உள்ளன என்பதும், மீதமுள்ள 16 விமானங்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக சேவைக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று, ஏர் இந்தியாவின் வைட்-பாடி ஃப்ளீட் தற்போது 43 விமானங்களை கொண்டுள்ள நிலையில் அதில் 33 விமானங்கள் இயக்கப்படுவதாகவும், மீதமுள்ளவை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சேவைக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
25 New Airbuses & 5 Boeings To Join Air India’s Fleet!
25 New Airbuses & 5 Boeings To Join Air India’s Fleet! | போட்டியை சமாளிக்க வேற லெவல் நடவடிக்கை..