பாட்னா: பீகாரின் பிரபலமான மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, மாநில ஆளுநர் பகு சவுகான் போன்றோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலம், பதர்பங்காவில் அமைந்துள்ளது லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அங்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் படத்துக்கு பதிலாக பிரதமர், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட பலரது படங்கள் இடம்பெறுள்ளது.
10ந்தேதி வெளியிடப்பட்டள்ள பி.ஏ பகுதி III மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டில், குறிப்பாக மதுபானி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் மாவட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டில், அவர்களின் படம் இடம்பெற வேண்டிய இடத்தில், பிரபலங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது, “சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ள, இந்த முறைகேடுகள் குறித்து தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கைக் கூட பதிவு செய்யப்படலாம் என்று கூறியதுடன், இது மாணவர்களின் குறும்பாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டன. அந்தந்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய, அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட உள்நுழைவு விவரங்கள் வழங்கப்பட்டன. ஹால் டிக்கெட்டுகளை தயாரிப்பதற்காக எங்கள் தரவு மையத்தால் செயலாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களை மாணவர்கள் பதிவேற்ற வேண்டும். ஆனால், மாணவர்களில் சிலர் பொறுப்பற்ற குறும்புகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், விசாரணைக்கு பின் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரித்தவர், இந்த சம்பவம், பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மற்றும் கவர்னரின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதும் மோசமான விஷயம்” என்றார்.