ஆவினில் வேலை வாங்கி தருவதாக நடந்த பண மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். காவல் நிலைய எல்லையைத் தாண்டி செல்லக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறையிடம் தெரிவித்து விட்டு தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்யலாம்.
ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது.