ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி: அரை கம்பத்தில் தேசிய கொடி

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி இந்தியாவில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை உட்பட நாடு முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 8-ம் தேதி இங்கி லாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். அவரது மறைவை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் துக்கம் அனு சரிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாள் துக்கம் அனு சரிக்கப்பட்டது.

இதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, மத்திய அரசு அலுவலகங்கள் உட்பட நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நேற்று அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. அரசு சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றபோது ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசியாக இருந்தார். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 முறை அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இந்திய மக்களின் அன்பு, உபசரிப்பை அவர் வியந்து பாராட்டியுள்ளார். இந்தியாவின் 3 குடியரசுத் தலைவர்களுக்கு அவர் விருந்து அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அஞ்சலி புத்தகத்தில் இந்திய மக்கள் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.