ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் எப்படி திரும்ப பெறுவது? ஆஃப்லைனில் எப்படி?

பொதுவாக நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருள் அல்லது ஆவணங்கள் தொலைந்து விட்டாலே பலரும் பதற்றமாகி விடுவோம். குறிப்பாக அரசு ஆவணங்களாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பட்ட, சிட்டா, கல்வி சான்றிதழ் என எதுவானமும் சரி. ஏனெனில் அரசு ஆவணங்களை வாங்க பல முறை அலைய வேண்டி இருக்குமே என்பதே பலருக்கும் பெரும் தலைவலியாக நினைப்பர்.

ஆனால் இன்றைய காலத்தில் அப்படியொரு கவலையே வேண்டாம். ஏனெனில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அதனை எப்படி திரும்ப பெறுவது என்பதைத் தான்.

உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா? ஆன்லைனில் தெரிந்துகொள்வது எப்படி?

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு பொதுவாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் ஒரு கார்டாக மட்டும் அல்ல, ஒரு அவசியமான ஆவணமாகவும் உள்ளது. இதன் மூலமே அரசின் உதவித் தொகைகள், அரசின் மானிய சலுகைகள், அரசின் புதிய திட்டங்கள் என பலவற்றையும் பெறமுடியும். முக்கியமாக அத்தியாவசிய தேவையான சிலிண்டர் பெறவும் ரேஷன் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது.

தொலைந்து விட்டால் என்ன செய்ய?

தொலைந்து விட்டால் என்ன செய்ய?

இப்படி பல வகையிலும் பயனுள்ள ஒரு ரேஷன் கார்டினை பெறுவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் பலரும் பலமுறை அலைந்திருக்கலாம். இப்படி ஒரு கார்டினை தொலைத்து விட்டால் பதற்றம் வரத்தானே செய்யும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கவலையே வேண்டாம். நீங்கள் இதற்காக நாள் கணக்கில் அலையவும் வேண்டாம். மணிக்கணக்கில் காத்திருக்கவும் வேண்டாம்.

 

என்ன செய்யணும்?
 

என்ன செய்யணும்?

தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ தளமான https://www.tnpds.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

அதில் பயனாளர் நுழைவு என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அந்த பக்கத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளையும் பதிவு செய்ய வேண்டும் .

அதனை கொடுத்த பிறகு பதிவு செய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

 

ஓடிபி கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும்

ஓடிபி கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும்

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி வரும் அதனை கொடுத்து அப்டேட் செய்து கொள்ளவும். அதன் பிறகு ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்யும் ஆப்சன் இருக்கும். அதன் உள்ளே சென்று ‘ ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதன் கீழாக உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் சேவ் என கொடுத்தால் பிடிஎஃப் வடிவதில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

மொபைல் எண் அவசியம்

மொபைல் எண் அவசியம்

இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு கீழ் கண்ட உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஹெல்ப்லைன் எண்களை 1967 & 1800 425 5901 ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட இந்த ஆன்லைன் முறையை நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால் மட்டுமே பெற முடியும்.

 

ஆஃப்லைன் முறையில்?

ஆஃப்லைன் முறையில்?

முதலில் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

அங்கு குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்ப்பிக்கவும்.

அதனுடன் ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் அத்துடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

அட்டை நிலை என்ன?

அட்டை நிலை என்ன?

உங்களது ரேஷன் கார்டு பெயர் மாற்றம், மொபைல் எண் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் திருத்தம் செய்த நிலையில், அதன் தற்போதைய நிலை பற்றி தெரிந்து கொள்ள, மின்னணு அட்டை தொடர்பான நிலையை அறிய என்று tnpds.go.in என்ற பக்கத்தில் இருக்கும். அதில் அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது குறிப்பு எண்ணை கொடுத்து செக் செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to recover lost ration card online? How to get offline?

Ration card is not only a card for purchasing essentials but also a necessary document. If such an important document is lost, how to retrieve it online? Getting offline?

Story first published: Monday, September 12, 2022, 14:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.