இந்த வருடத்திற்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை எட்டியுள்ளது.
இந்த வருடத்தில் மூன்று இலட்சம் பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவது இலக்காகும். இதன் அடிப்படையில் இத்தொகையை மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.