வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாபி பாடகரும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சித்து மூஸ்வாலா, கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, டில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பஞ்சாப் பாடகரும், அம்மாநில காங்., கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மான்ஸா நகரில் தனது வாகனத்தில் அவர் வந்த போது, மர்ம நபர்கள் அவரது வாகனத்தின் மீது 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர், பலியானார். இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது அரசியல் படுகொலை என காங்., கட்சி கண்டனம் தெரிவித்தது.
என்.ஐ.ஏ சோதனை:
இந்நிலையில், இது தொடர்பாக, டில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement