Iphone IOS 16 update :எந்த ஐபோனுக்கெல்லாம் புதிய IOS 16 அப்டேட் கிடையாது.

இதுவரை ஐபோனில் கொடுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மட்டும் பெரிய அப்டேட்டாக ஐஓஎஸ் 16 இருக்கும். இதன் மூலம் தனித்துவமான லாக் ஸ்க்ரீன் செட்டிங்ஸ், போட்டோ தரம், நீங்கள் ஐமெசேஜ் மூலம் அனுப்பிய மெசஜை எடிட் அல்லது அன்சென்ட் செய்யும் வசதி என பல சிறப்பம்சங்கள் இந்த அப்டேட்டில் வருகிறது.

ஆனால் இந்த அப்டேட் எல்லா ஐபோன்களுக்கும் கிடைக்காது. அப்படியென்றால் இந்த அப்டேட் எந்தெந்த ஐபோன் மாடலுக்கெல்லாம் கிடைக்கப்போகிறது என்பதை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

தற்போதுதான் நீங்கள் ஐபோன் வாங்க போகிறீர்கள் என்றால் இந்த பட்டியலோடு அந்த மொபைல் விவரங்களையும் கொடுத்துள்ளோம்.

ஐபோன் 8

A11 பயோனிக் சிப்செட்டோடு 2017 ஆம் ஆண்டு வெளியான பட்ஜெட் ஃபிரண்ட்லி முந்தைய ஜெனரேஷன் மாடல் என்றால் அது ஐபோன் 8 தான்.

4.7இன்ச் ரெட்டினா HD டிஸ்பிளே 64GB மற்றும் 256GB சேமிப்பு வசதி 12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமரா
ஐபோன் 8 ப்ளஸ்

A11 பயோனிக் சிப்செட்டோடு 2017 ஆம் ஆண்டில் வெளியானஐபோன் 8 சீரிஸில் வெளியான பெரிய டிஸ்பிளே ஐபோன் மாடல்.

5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்பிளே 64GB மற்றும் 256GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமரா
ஐபோன் X

ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஐபோன் 8 சீரிஸோடு சேர்த்து விடப்பட்ட ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் X

5.8 இன்ச் ரெட்டினா HD டிஸ்பிளே 64GB மற்றும் 256GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமரா
ஐபோன் Xs

ஆப்பிள் ஐபோனில் முதல் முறையாக இ-சிம் வசதியோடு வெளியிடப்பட்ட முதல் ஐபோன் சீரிஸ். இது 2018இல் வெளியானது. இது A12 பயோனிக் சிப் பொருத்தப்பட்டது.

5.8 இன்ச் ரெட்டினா HD டிஸ்பிளே 64GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமரா
ஐபோன் Xs மேக்ஸ்

ஐபோன் Xs சீரிஸின் பெரிய டிஸ்பிளே மற்றும் IP68 ரேட்டிங்கோடு வெளியான மாடல் ஐபோன் Xs மேக்ஸ்

6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா HD டிஸ்பிளே 64GB, 256GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமரா A12 பயோனிக் சிப்
ஐபோன் XR

2018இல் வெளியான ஐபோன் மாடல்களில் பட்ஜெட் ஃபிரண்ட்லி பிரீமியம் ரக மொபைல் இந்த ஐபோன் XR. 2019 ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான ஐபோன் மாடலும் இதுதான்.

6.1 இன்ச் IPS எல்சிடி டிஸ்பிளே 64GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமராA12 பயோனிக் சிப்
ஐபோன் 11

2020 ஆம் ஆண்டின் அதிகமான விற்பனையான ஐபோன் மாடல்.

6.1 இன்ச்லிக்விட் ரெட்டினா எச்டி டிஸ்பிளே 64GB, 128GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA13 பயோனிக் சிப்
ஐபோன் 11 ப்ரோ

ஐபோன் மொபைல்களில் நைட் மோட் ஆப்ஷன் நிறுவப்பட்ட ஐபோன் மாடல் மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா வசதியோடு அறிமுகமான மாடல்.

5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே 64GB, 512GB சேமிப்பு வசதி 12MP+12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA13 பயோனிக் சிப்
ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 11 சீரிஸில் பெரிய டிஸ்பிளேவோடு வெளியான மாடல்

6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே 64GB, 512GB சேமிப்பு வசதி 12MP+12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA13 பயோனிக் சிப்
ஐபோன் 12

A14 பயோனிக் ப்ராசஸர் கொண்டு வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12 2021 ஆம் ஆண்டில் அதிகமாக விற்பனையான ஐபோனாகும்.OLED டிஸ்பிளேயில் பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைலாக இது வெளியானது.

6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 64GB, 128GB மற்றும் 256GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA14 பயோனிக் சிப்
ஐபோன் 12மினி

ஐபோனில் வெளியான மினி வகை மாடல்களில் முதலில் 2020ஆம் ஆண்டு வெளியானது ஆப்பிள் ஐபோன் 12 மினி

5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 64GB, 128GB மற்றும் 256GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA14 பயோனிக் சிப்
ஐபோன் 12 ப்ரோ

ஐபோன் 12 சீரிஸில் LiDAR கேமரா வசதியோடு வெளியானது ஐபோன் 12 ப்ரோ

6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 128GB,256GB மற்றும் 512GB சேமிப்பு வசதி 12MP+12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA14 பயோனிக் சிப்
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 12 ப்ரோவின் வசதிகளோடு அதை விட பெரிய டிஸ்பிளே வசதியோடு வெளியான மாடல்

6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 128GB,256GB மற்றும் 512GB சேமிப்பு வசதி 12MP+12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA14 பயோனிக் சிப்
ஐபோன் 13

ஐபோன் மாடல்களில் A15 பயோனிக் சிப் ப்ராசஸர்களோடு வெளியான பிரபலமான மாடல்.

6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 128GB,256GB மற்றும் 512GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA15 பயோனிக் சிப்
ஐபோன் 13 மினி

ஐபோன் மாடல்களில் இரண்டாவது மட்டும் கடைசியுமான ஐபோன் மினி மாடல் மொபைல் ஐபோன் 13 மினி

5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 128GB,256GB மற்றும் 512GB சேமிப்பு வசதி 12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA15 பயோனிக் சிப்
ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 சீரிஸில் வெளியிடப்பட்ட வேகமான மட்டும் மேம்படுத்தப்பட்ட மாடல் ஐபோன் 13 ப்ரோ.மேலும் இதன் ஸ்டோரேஜ் வசதி 1டிபி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 128GB,256GB மற்றும் 512GB, 1TB வரை சேமிப்பு வசதி 12MP+12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA15 பயோனிக் சிப்
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 13 சீரிஸில் வெளியிடப்பட்ட பெரிய டிஸ்பிளே மற்றும் சிறந்த மாடல். இதிலும் ஸ்டோரேஜ் வசதி 1டிபி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 128GB,256GB மற்றும் 512GB, 1TB வரை சேமிப்பு வசதி 12MP+12MP+12MP பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமராA15 பயோனிக் சிப்
ஐபோன் SE

ஐபோன் SE தான் ஐஓஎஸ் 16 ஐ பெறப்போகிற மிக குறைந்த விலை ஐபோன் மாடல். இது 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்பட்டது.

4.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே 256GB சேமிப்பு வசதி 12MP பின்பக்க கேமரா, 7MP முன்பக்க கேமராA15 பயோனிக் சிப்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.