நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் அசல் கலைஞன். இம்சை அரசனாக, நாய் சேகராக, ஸ்நேக் பாபுவாக, கைப்புள்ளையாக தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்கு வடிவேலு அளித்த கொடை ஏராளம். அவரது நகைச்சுவை நடிப்பைப் பார்த்து பிற கலைஞர்கள் டரியல் ஆன வரலாறு உண்டு. 2k கிட்ஸுக்கு தன் ரியாக்சன்களை மீம் கன்டன்டாக வழங்கிச் சிரிக்கும் வைகைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.அவரது பெர்சனல் பக்கங்களிலிருந்து…
* வடிவேலுவிற்கு பரமக்குடியில் அருகில் இருக்கிற அய்யனார் கோவில் தான் குலதெய்வம். வருடம் ஒரு முறை குடும்பத்தோடு சென்று இரண்டு மணி நேரமாவது தங்கி வழிபடுவார். மேலும் கோயிலை அவர் செலவிலேயே புதுப்பித்தும் தந்திருக்கிறார்.
* மிகுந்த ஆன்மிக நம்பிக்கை உள்ளவர். ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கையும், அவரே நிலைமையை கணித்து விடுகிறவரும் கொண்டவர். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை பல்வேறு கலர் சட்டைகள் அணிவார். வியாழக்கிழமை மஞ்சள் சட்டையும், வெள்ளிக்கிழமை அரக்கு கலர் சட்டையும், சனிக்கிழமை கருப்பு சட்டையும் மட்டும்தான் அணிவார். அதற்கான காரணங்களை அவர் தெளிவுபட சொல்வார். பேஷன் ஆடைகளையும் அதிகமாக பயன்படுத்துவார். அத்தனை முக்கிய ப்ராண்ட் பெயர்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பார்.
* விமானப்பயணத்தை விட ரயில் பயணத்தை தான் விரும்புவார். அப்போதுதான் மக்களிடம் தாராளமாக பேசிக்கொண்டு போக முடியும் என்று நினைப்பார். ஆனால் அவருக்கு இருக்கும் புகழின் காரணமாக அவரால் மக்கள் அலையில் நீந்த முடியாத காரணத்தால் விமான பயணம்தான். அப்படியும் விமான பயணங்களின் போது சராசரி 100 பேருக்காவது செல்பி போஸ் கொடுக்க வேண்டி இருக்கிறது. முகம் கோணாமல் ரசிகர்களிடம் பேசுவார்.
* அய்யனார், மதுரை மீனாட்சி, அம்மா சரோஜினி, பழனி முருகன் படங்கள் மட்டுமே வீட்டிலும் அலுவலகத்திலும் இருக்கும். அவர்களை வணங்கி விட்டு தான் தினசரி வேலை தொடங்கும். ஏதாவது புது படம் ஆரம்பித்தால் அம்மாவை பார்த்து வணங்கி விட்டுதான் சென்னைக்கு வருவார். எம்.எஸ்.வி, இளையராஜா பாடல்களை அதிகம் கேட்பார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தானும், இளையராஜாவும் இருப்பதை பார்க்கிறவர்களிடம் நெருங்கிப் பேசுகையில் பெருமையாக சொல்வார். மனசு சரியில்லை என்றால் `அய்யா இருக்கிறாரா’ என்று விசாரித்துவிட்டு இளையராஜா ஸ்டுடியோவுக்கு ஒரு விசிட் அடித்து விடுவார். ராஜாவையே சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவர் வடிவேலு.
* பழைய படங்களில் கிட்டத்தட்ட நூறை ஞாபகத்தில் வைத்திருக்கிறார் வடிவேலு. முழு பாடலையும் ஏற்ற இறக்கத்தோடு பாடுவார். மதுரை கண்ணாடிக் கடையில் வேலை பார்க்கும் போது பின்னணியில் பாடல்கள் ஒலிக்க, கேட்டதே காரணம். சரோஜா தேவியிடம் ‘நில்லடி நில்லடி சீமாட்டி’ பாடலை ஆதவன் படப்பிடிப்பில் அப்படியே பாடிக் காட்டி அவரிடம் கைத்தட்டல் வாங்கியதை இன்றைக்கும் பெருமைப்பட சொல்வார்.
* நகைச்சுவையில் அவருக்குப் பிடித்த குருமார்கள் சந்திரபாபு, தங்கவேலு, சுருளிராஜன் என மூன்றே பேர்தான். இவர்களின் புகழ்பெற்ற காமெடிகளை அப்படியே நடித்துக் காட்டுவார். நாகேஷ் மீது மரியாதையுண்டு. அவரை சந்தித்து பேசியதைப் பற்றி சுவைபட பேசுவார்.
* டி.எம்.சௌந்தரராஜனின் வெறிபிடித்த ரசிகர். தெருவில் அவரை பார்த்தால் கூட காலில் விழுந்து வணங்கி விடுவார். அவர் மாதிரியே ராகம் போட்டு பாடல்களை மூச்சு விடாமல் பாடுவார். டி.எம்.எஸ் அவர்களுக்காக எங்கே பாராட்டு விழா நடந்தாலும் அங்கே அவரை முதல் வரிசையில் பார்க்கலாம்.
* அசைவ உணவுகளைத்தான் குறைவாக, ஆனால் விரும்பி சாப்பிடுவார். மதுரை வீட்டுக்கு மாதம் ஒருமுறை போகும்போது கண்மாய் மீன்களை பிடித்து வரச் சொல்லி சமைத்து சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார். வெளியூர் ஷுட்டிங் போனாலும் அவரது மெனுவில் மீன் குழம்பு கண்டிப்பாக இருக்கும்.
* பழைய படங்களில் கிட்டத்தட்ட நூறை ஞாபகத்தில் வைத்திருக்கிறார் வடிவேலு. முழு பாடலையும் ஏற்ற இறக்கத்தோடு பாடுவார். மதுரை கண்ணாடிக் கடையில் வேலை பார்க்கும் போது பின்னணியில் பாடல்கள் ஒலிக்க, கேட்டதே காரணம். சரோஜா தேவியிடம் ‘நில்லடி நில்லடி சீமாட்டி’ பாடலை ஆதவன் படப்பிடிப்பில் அப்படியே பாடிக் காட்டி அவரிடம் கைத்தட்டல் வாங்கியதை இன்றைக்கும் பெருமைப்பட சொல்வார்.