செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்கா வீட்டிற்கு சென்றவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசாமி தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் முருகன்(50). இவர் நேற்று மேல்மருவத்தூர் அடுத்த ஒரத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்குள்ள கிணற்றில் முருகன் குளிக்க சென்றுள்ளார். ஆனால் முருகனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மேல்மருவத்தூர் போலீசார், உயிரிழந்த முருகனின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.