வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுவதும் தேர்தல் கமிஷினில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் கமிஷன் அதிரடியாக நீக்கியுள்ளது.
நம் நாட்டில் அரசியல் கட்சி துவக்குபவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் கீழ், சில சலுகைகளைப் பெற வேண்டும் எனில், கட்சியை பதிவு செய்ய வேண்டும்
இந்நிலையில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, 2 ஆயிரத்து 796 கட்சிகளில், 623 கட்சிகள் மட்டுமே, கடந்த 2019 லோக்சபா தேர்தலில் களமிறங்கின.
![]() |
நாடு முழுதும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத கட்சிகளாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தன. இந்தக் கட்சிகள் மீது பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்சிகளை பதிவு செய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை, பட்டியலில் இருந்தும் தேர்தல் கமிஷன் அதிரடியாக நீக்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement