அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கை.. நிறுவனங்களின் கலங்க வைக்கும் அறிவிப்புகள்.. உஷாரா இருங்க!

கோல்டுமேன் சாக்ஸ் குழும நிறுவனம் அதன் வருடாந்திர நடவடிக்கையினை, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட் நிறுவனமான இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அதன் ஊழியர்களில் 1 – 5% வரை குறைக்கப்படுவது வழக்கமாக வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இடத்திற்கு முன்னேறும் பதஞ்சலி குழுமம்.. பாபா ராம்தேவின் அதிரடி திட்டம்!

பணி நீக்க நடவடிக்கை

பணி நீக்க நடவடிக்கை

கடந்த ஜூன் மாத நிலவரப்படி கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 15% அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பணி நீக்க நடவடிக்கையானது செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த பணி நீக்க நடவடிக்கையில் 500 ஊழியர்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு குறைப்பு திட்டம்

செலவு குறைப்பு திட்டம்

இது குறித்து நியூயார்க் டைம்ஸ் அறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இதுவரையில் வெளியாகவில்லை. கடந்த ஜூலை மாதம் இந்த முதலீட்டு நிறுவனமானது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவினை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக புதிய பணியமர்த்தலையும் மெதுவாக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபத்திலும் சரிவு
 

லாபத்திலும் சரிவு

இதனை மேற்கொண்டு துரித்தப்படுத்தும் விதமாக இந்த நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில், லாபத்தில் 48% சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்த ஆண்டின் இறுதியில் நிறுவனம் மீண்டும் மதிப்பாய்வு செய்யலாம் என்றும் தெரிகின்றது. ஆக இந்த செலவு குறைப்பு நடவடிக்கையானது மேலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்

வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்

அமெரிக்காவில் தற்போது ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய வங்கியானது நடவடிக்கை எடுத்தாலும், இது மேற்கொண்டு வளர்ச்சியினை முடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பாக நிதித்துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல முக்கிய நிறுவனங்களின் நடவடிக்கை

பல முக்கிய நிறுவனங்களின் நடவடிக்கை

நிதித்துறையில் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் இது அந்த துறையில் பணி நீக்கத்தினை ஊக்குவிக்கலாம். இது புதிய பணியமர்த்தலையும் குறைக்க வழிவகுக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையில் கோல்டுமேன் சாக்ஸ், ஜேபி மார்கன், வெல்ஸ் ஃபோர்கோ, சிட்டி குழுமம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Goldman sachs plans to cut jobs this month after 2 years

Goldman Sachs is expected to cut 1-5% of its workforce this year.

Story first published: Tuesday, September 13, 2022, 14:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.