சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பங்கு சந்தையின் போக்கு எப்படி இருக்கும், இது முதலீடு செய்ய சரியான நேரமா? அப்படி முதலீடு செய்தால் எந்த துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன? தரகு நிறுவனங்களின் கருத்து என்ன வாருங்கள் பார்க்கலாம்.
உள்நாட்டு தரகு நிறுவனமான ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ், அடுத்த 2 – 3 காலாண்டுகளில் ஏற்றம் காணலாம் என சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.
இந்திய பங்கு சந்தையின் தலையெழுத்து இன்று எப்படியிருக்கும்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

என்னென்ன பங்குகள்?
இதில் ஆட்டோ துறை பங்குகள், நிதி நிறுவனங்கள், கெமிக்கல் பங்குகள் என சில துறை சார்ந்த பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. இது ராமகிருஷ்ணா ஃபோர்கிங்ஸ், ரிகோ ஆட்டோ, ரெப்போ ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் செம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் என சிறந்த பங்குகளை பட்டியல் போட்டுள்ளது.

ராமகிருஷ்ணா ஃபோர்கிங்ஸ் (Ramakrishna Forgings)
ராமகிருஷ்ணா ஃபோர்கிங்ஸ் (Ramakrishna Forgings) அடுத்த 2 – 3 காலாண்டுகளில் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கினை 201 – 205 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது 230 ரூபாய் மற்றும் 247 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதுள்ளனர். இது 178 – 182 என்ற லெவல் வரையில் குறையலாம். இந்த லெவலில் கிடைத்தாலும் வாங்கலாம் .

ரிகோ ஆட்டோ (Rico Auto)
ரிகோ ஆட்டோ (Rico Auto) நிறுவனததின் வருவாய் விகிதம் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ஜின் விகிதமும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பங்கு விலையில் சமீபத்தில் அதிகரிப்பு இருந்தாலும், அடுத்த 2 – 3 காலாண்டுகளில் இப்பங்கினை 55.5 – 57.5 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதனை 62.5 மற்றும் 68.5 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 – 51 ரூபாய் என்ற லெவலுக்கு வரும்போது வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் வாங்கி வைக்கின்றனர்.

கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்
ஹெச் டி எஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் இரு இலக்க வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் திறன் விரிவாக்கம் மற்றும் வலுவான தேவையின் பின்னணியில் இப்பங்கின் விலையானது அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 32 – 33.5% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Experts recommend buying these 4 stocks over next 2- 3 quarters
Ramakrishna Forgings, Rico Auto, Repco Home Finance and chemcon Specialty Chemicals have been recommended by HDFC Securities to buy.