சென்னை: அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனையின் போது, துறைகளில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்து அவர் கேட்டறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
