உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட, வளர்சிதை மாற்ற நோய் ஆகும், இந்தியாவில் 20 மற்றும் 70 வயதுக்குட்பட்ட 8.7 சதவீத மக்கள்தொகை நீரிழிவு நோயுடன் போராடி வரும் நிலையில், எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது, இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் பல உடல் பாகங்களை பாதிக்கலாம்.
இதையும் படியுங்கள்: சூடான நீரில் தினமும் 10 கிராம் ஊறவைத்து…. சுகர் பேஷன்ட்கள் இப்படி வெந்தயம் பயன்படுத்திப் பாருங்க!
எனவே, நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்கள், அல்லது நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் கூட, சில உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை தவிர்க்கவும் மற்றும் அவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். சரியான தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு உதவ, நீங்கள் ரசிக்கக் கூடிய சர்க்கரை நோய்க்கு உகந்த உணவான பலாப்பழத்தை இங்கே தருகிறோம்.
பலாப்பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ரிபோஃப்ளேவின், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. பலாப்பழம் 100 அளவில் சுமார் 50-60 என நடுத்தர கிளைசெமிக் அளவைக் கொண்டு உள்ளது என்று மும்பை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் உணவியல் நிபுணர் டாக்டர் ஜினல் படேல் கூறினார். “ஆனால், நீரிழிவு நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் அளவுக் கொண்ட பச்சையான பலாப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை சமன் செய்ய உதவும். கூடுதலாக, இதில் கலோரிகளும் குறைவாக உள்ளது, ”என்று அவர் indianexpress.com இடம் கூறினார்.
இருப்பினும், நிபுணர் அதை அதிக அளவில் சாப்பிடுவதற்கு எதிராக எச்சரித்தார். “நீரிழிவு நோயாளிகள் பச்சையாக சாப்பிடும்போது கூட பலாப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். அரை கப், சுமார் 75 கிராம், பலாப்பழத்தில் நியாயமான அளவு நார்ச்சத்து உள்ளது, இது உடலின் தினசரி நார்ச்சத்து அளவுகளைப் பூர்த்தி செய்ய உதவும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற அளவாக இருக்கும்,” என்று அவர் பரிந்துரைத்தார், மேலும் சமைத்த வகையுடன் ஒப்பிடும்போது, குறைந்த சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், பச்சை பலாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஆனால், சர்க்கரை அளவைப் பெற்ற பிறகு அதைக் கண்காணிக்க வேண்டும், ”என்று அவர் விளக்கினார்.
ஆரோக்கியமான உணவு ரெசிபிகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளும் செஃப் சஞ்சீவ் கபூர், பலாப்பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகளைப் பட்டியலிடும் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார், அதற்கு அவர் இட்ட பொருத்தமான தலைப்பு: ‘இந்தப் பழத்தின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி யாரும் நம்மிடம் ஏன் சொல்லவில்லை?’.
பலாப்பழம் சிலருக்கு, குறிப்பாக பிர்ச் மகரந்தத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அழற்சி எதிர்வினைகள் மற்றும் அசௌகரியங்களைத் தூண்டும். “உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், நீங்கள் பலாப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று டாக்டர் ஜினல் அறிவுறுத்தினார். மேலும், இரத்த உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்தத்தில் உறைதல் அபாயத்தை அதிகரிக்கும்.
கூடுதலாக, எந்தவொரு அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பலாப்பழத்தை உட்கொள்ளக்கூடாது, டாக்டர் ஜினல் வலியுறுத்தினார். “மேலும், உங்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் பொட்டாசியத்தை உருவாக்குகிறது, இது ஹைபர்கேமியா என்ற நிலைக்கு வழிவகுக்கிறது,” என்றும் டாக்டர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil