சிட்னி, :ஆஸ்திரேலியாவில், ௭௭ வயது முதியவர் ஒருவர், அவர் செல்லமாக வளர்த்த கங்காரு தாக்கி உயிரிழந்தார்.ஆஸ்திரேலியாவின் ரெட்மாண்ட் நகரில் வசித்த முதியவர் ஒருவர், தன் வீட்டு தோட்டத்தில், கங்காரு ஒன்றை வளர்த்து வந்தார்.சமீபத்தில், இவர் தன் வீட்டில் இருந்தபோது, இவரை கங்காரு தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே ரத்த காயங்களுடன் தரையில் விழுந்து கிடந்தார். அங்கு, எதிர்பாராத விதமாக சென்ற இவரது உறவினர், உடனே போலீசுக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுடன் வந்த மருத்துவ ஊழியர்களை கங்காரு வழிமறித்து, உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளது.இதையடுத்து, போலீசார் கங்காருவை சுட்டுக் கொன்றனர். பின், மருத்துவ ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது, முதியவர் உயிரிழந்து கிடந்தார்.அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவில், ௮௬ ஆண்டுகளுக்குப் பின், தற்போது, கங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement