உலகின் பல நாடுகளிலும் பணி நீக்கம் என்ற பதற்றமானது பல துறையினர் மத்தியில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக டெக் ஊழியர்கள் மத்தியில் இந்த பதற்றமானது அதிகமாகவே காணப்படுகின்றது.
ஆனால் டெஸ்லாவின் நிலையே வேறு. இந்தியாவில் அதன் வணிகம் நிச்சயமற்ற நிலை இருப்பதால், தொடர்ந்து பல நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே தனது வணிகத்தினை இந்தியாவில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றது.
HCL-ல் 350 பேர் பணிநீக்கமா.. பதற்றத்தில் ஐடி ஊழியர்கள்.. இன்னும் என்னவாகுமோ?

வரி சலுகை கிடையாது
எனினும் இந்தியாவில் வரி அதிகம் என எலான் மஸ்க் தெரிவித்து வரும் நிலையில், அதன் எதிர்காலம் இந்தியாவில் நிச்சயமற்ற நிலையில் இருந்து வருகின்றது. இந்திய அரசோ இந்தியாவில் உற்பத்தி செய்து இங்கு விற்பனை செய்யப்படும் கார்களுக்கே வரி சலுகை அளிக்கப்படும். குறிப்பாக அரசின் பிஎல்ஐ திட்டத்தின் மூலம் பல்வேறு மானிய சலுகைகளை அளித்து வருகின்றோம்.

உற்பத்தி செய்தால் தான் சலுகை
நீங்கள் இங்கு உற்பத்தி செய்து இங்கு விற்பனை செய்யும் கார்களுக்கு இந்த சலுகையினை பெற்றுக் கொள்ளலாம். இங்கிருந்து ஏற்றுமதி செய்து கொள்ளலாம். ஆனால் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் கார்களுக்கு எந்த வரிச்சலுகையும் அளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டது.
ஆக இப்படி ஒரு நிலையில் தான் டெஸ்லாவின் வருகை என்பது பெரும் கேள்வி குறியாகியுள்ளது.

இந்தியர்கள் விலகல்
இந்தியாவில் இத்தகைய நிலைப்பாட்டுக்கு மத்தியில், 12 இந்தியர்களை கொண்ட டெஸ்லா இந்தியர்கள் குழுவில் இருந்து, ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இந்திய குழுவில் கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டு நிர்வாக அதிகாரியான மனுஜ் குரானா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த ஜூன் மாதம் டெஸ்லாவை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் 3 பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நிஷாந்த், சட்ட நிபுணர் நித்திகா சாப்ரா மற்றும் விற்பனை நிர்வாகியான அங்கித் கேசர்வானி ஆகியோர் அடங்குவர்.

டெஸ்லா அவ்வளவுதானா?
இந்திய ஊழியர்களின் விலகல், இந்தியாவில் எலான் மஸ்கின் ஆர்வமின்மையை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி, கடந்த ஜூன் மாதம், டெஸ்லா தனது மனித வளத் தலைவர் சித்ரா தாமஸை, அதன் இந்திய நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக உயர்த்தியது. இது இந்திய சந்தையின் தலைவராக நியமிக்கப்பட்ட பிரசாந்த் மேனன் வெளியேறியதை அடுத்து இந்த நடவடிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனையும் குறைவு தான்?
டெஸ்லாவின் ஆடம்பர கார்களின் இறக்குமதி செய்து விற்பனை செய்து விற்பனை செய்யும்போது, வரி அதிகரிப்பால், விலையும் மிக அதிகமாக இருக்கிறது என்பதால், இதுவே கார் பிரியர்கள் மத்தியில் ஆர்வத்தினை குறைத்துள்ளது. இந்தியாவில் டெஸ்லா தனது மாடல் 3 காரினை செய்யலாம் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதன் காரணமாக சுமார் 60 – 70 லட்சம் ரூபாய் வரையில் செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian executives continue to leave Tesla
Due to the uncertainty of Tesla’s business in India, several Indian executives are reportedly leaving the company