கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தயாரித்து வருகிறது என்பதும் அந்த போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கூகுள் பிக்சல் போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கை.. நிறுவனங்களின் கலங்க வைக்கும் அறிவிப்புகள்.. உஷாரா இருங்க!

கூகுள் பிக்சல் போன்
பிக்சல் போன்களின் சில தயாரிப்புகளை இந்தியாவிற்கு மாற்ற கூகுள் பரிசீலித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பதட்டம், சீனாவில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏலம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 500,000 மற்றும் 1 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களை ஏலத்திற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் பிக்சலின் வருடாந்திர உற்பத்தியில் 10-20 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

சுந்தர் பிச்சை
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் பிக்சல் போன்களை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை பரிசீலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், இந்திய அரசின் அனுமதி கிடைத்தால் விரைவில் இந்தியாவில் பிக்சல் போன் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன்
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தங்களது உற்பத்தி கூட்டாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் மூலம் இந்தியாவில் நான்கு மாடல்களை தயாரித்து வருகிறது. இந்தியாவில் மேலும் தனது உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கூகுள் ஸ்மார்ட் வாட்ச்
கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டால் ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டி ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Google considers moving some production of Pixel phones to India
Google considers moving some production of Pixel phones to India | இந்தியாவில் உற்பத்தி செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை திடீர் முடிவு..!