இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு பல்வேறு துறைகளின் ஊடாக ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு பல்வேறு துறைகளின் ஊடாக ஒத்துழைப்பு வழங்க தயார் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யொகோயமா (Kenichi Yokoyama) தெரிவித்துள்ளார். இவர் உள்ளிட்ட பிரமுகர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். இதன் போது ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு முடியுமான பல்வேறு துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுப் பணிப்பாளர் சென் சென் (Chen Chen), பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் (Utsav Kumar) மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.