சென்னை: சைமா விருது விழாவில் டாக்டர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த சினிமா கலைஞருக்கான விருதுகளை சைமா மிகப்பெரிய விழா நடத்தி வழங்கியது.
லோகேஷ் கனகராஜ் உடன் சிவகார்த்திகேயன் விழாவில் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளுடன் டிரெண்டாகி வருகிறது.
விருதுகளை குவிக்கும் சிவகார்த்திகேயன்
கோலிவுட்டின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல விருதுகளை அள்ளி வருகிறார். டாக்டர் படத்தில் சிறப்பாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான விருது சைமா விருது விழாவில் வழங்கப்பட்டது. விருது வாங்கிய சிவகார்த்திகேயனின் செம மாஸான புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் உடன் சிவகார்த்திகேயன்
விருது வழங்கும் விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் சிவகார்த்திகேயன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது க்ளிக் செய்யப்பட்ட கேண்டிட் ஷாட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

லோகேஷ் யூனிவர்ஸில்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் கூடிய விரைவில் சிவகார்த்திகேயனும் ஒரு கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தால் எப்படி மாஸாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், இருவரும் அங்கே என்ன பேசிக் கொண்டனர் என ஏகப்பட்ட மீம்களும் பறக்கின்றன.

சிம்புவுடன் சிவகார்த்திகேயன்
மாநாடு படத்திற்காக விருது வாங்கிய நடிகர் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படு ஜாலியாக சிரித்து பேசிய புகைப்படமும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. டாக்டர், மாநாடு உள்ளிட்ட படங்கள் கடந்த ஆண்டு அனைத்து ரசிகர்களையும் கடந்து மிகப்பெரிய வெற்றியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு பிரின்ஸ்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 5 நாட்கள் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாக்டர் மற்றும் டான் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை பிரின்ஸ் முந்தும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.