உங்க வீட்டில் சுட்டி குழந்தைகள் இருக்காங்களா.. அப்படின்னா இதை கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரின் மத்தியிலும் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துபவர்கள் மிக குறைவு. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு என வரும்போது, இன்னும் சிறிது காலம் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்போம்.

ஆனால் கடைசியில் அதனை செய்ய முடியாமல் போகலாம். இதனால் குழந்தைகளின் கல்வி செலவினங்களுக்கு கடன் வாங்குவோம்.

இப்படித் தான் பல குடும்பங்களிலும் நடந்து கொண்டுள்ளது. பலரும் விழிப்புணர்வு என்பது இல்லாமலேயே கடைசி நேரத்தில் தத்தளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

பெங்களூரில் கடும் டிராபிக்.. காரை விட்டு இறங்கி 3 கிமீ ஓடிய டாக்டர்.. என்ன காரணம்?

 திட்டமிடுங்கள்?

திட்டமிடுங்கள்?

முதலீட்டு திட்டங்களில் குழந்தையின் கல்விக்காக திட்டமிடுவது என்பது தவிர்க்க முடியாத பொறுப்புகளில் ஒன்றாக உள்ளது. குழந்தைகளுக்கு எனும் போது அதில் ரிஸ்கும் அதிகம் இருக்க கூடாது. அதே சமயம் வருமானம் ஒரளவுக்கு தரக்கூடிய முதலீடாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. ஆக உங்கள் குழந்தையின் வயது என்ன? அவர்களின் கல்வி திட்டம் என்ன? அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை மதிப்பிடுங்கள். விரைவில் முதலீட்டினை தொடங்கிட வேண்டும்.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் எனும் போது நிலையான வருமானம் தரும் நீண்டகால முதலீடுகளாக இருக்கும்பட்சத்தில், அவை எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இது எதிர்காலத்தில் எந்தளவுக்கு அதிகரிக்குமோ என்ற அச்சமும் எழலாம். உதாரணத்திற்கு இன்று 1 லட்சம் ரூபாயாக இருக்கும் கல்விக் கட்டணம், இன்னும் 10 வருடங்கள் கழித்து 5 லட்சம் அல்லது அதற்கு மேலாக கூட அதிகரிக்கலாம்.

பணவீக்கம் அதிகரிக்கலாம்
 

பணவீக்கம் அதிகரிக்கலாம்

ஆக பணவீக்கம் என்பது நிச்சயம் எதிர்காலத்தில் அதிகரிக்க கூடும். ஆக அதற்கேற்ப உங்களது முதலீடுகளை திட்டமிட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 7% ஆக உயர்ந்துள்ளது. ஆக கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக நிஃப்டியின் cagr விகிதம் 13% அதிகரித்துள்ளது. இது இன்னும் நீண்டகால நோக்கில் அதிகமாக உள்ளது. ஆக நீண்டகால முதலீடு செய்வது அவசியமானது. இதற்காக நீங்கள் எஸ் ஐ பி (SIP) முறையை தேர்தெடுக்கலாம்.

திட்டமிட வேண்டும்

திட்டமிட வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல்வேறு வகையான ஃபண்டுகள் உள்ளன. ஆக அவற்றில் எதனை தேர்வு செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.

குழந்தைகளின் கல்விக்காக எனும்போது அவர்கள் எந்த துறையை தேர்தெடுக்க போகிறார்கள். உதாரணத்திற்கு அவர்கள் மருத்துவ துறையை விரும்புகிறார்கள் எனில் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். இல்லை பொறியியல் அல்லது என்ன படிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப முதலீட்டினை திட்டமிட வேண்டும். அதனையும் இந்தியாவில் படிக்க போகிறீர்களா? அல்லது வெளி நாடு சென்று படிக்க போகிறார்களா? என்பதையும் திட்டமிட வேண்டும். இதற்கு கால அவகாசம் எவ்வளவு என பல விஷயங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. ஆக இதனையெல்லாம் முதலில் திட்டமிட வேண்டும்.

 

எந்த வகையான ஃபண்டுகள்?

எந்த வகையான ஃபண்டுகள்?

உங்களின் ரிஸ்க்-க்கு ஏற்ப பல ஃபண்டுகள் உள்ளன. லார்ஜ் கேப், ஸ்மால் கேப், மிட் கேப் ஃபண்டுகள், மல்டிகேப் ஃபண்டுகள் என பலவும் உள்ளன. எனினும் இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் கல்விக்காக என சில ஃபண்டுகள், ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஃபண்டுகள், இடிஎஃப் என பலவகையில் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் லாக் இன் ஃபீரியர்டு உள்ளதை போல திட்டமிடுங்கள்.

சில ஃபண்டுகள் இதோ?

சில ஃபண்டுகள் இதோ?

ஐசிஐசிஐ, ஹெச் டி எஃப் சி, டாடா, எஸ்பிஐ, யுடிஐ போன்ற பல வகையான ஃபண்டு ஹவுஸ்கள் உள்ளன. இவைகள் குழந்தைகளுக்கான சில ஃபண்டுகளை வழங்குகின்றன. இதன் லாக் இன் காலம் 5 வருடங்கள் என்றாலும் இதனை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளன. இதில் சில வகையான ஃபண்டுகளுக்கு வரிச்சலுகையும் கிடைக்கலாம். இதில் சில ஃபண்டுகள் 15% வரையில் கூட வருமானம் கொடுக்கின்றன. ஆக இது உங்கள் குழந்தைகளின் எதிர்கால கனவை நனவாக்க பயனுள்ளதாக அமையும்.

உங்களின் இதுபோன்ற தவிர்க்க முடியாத இலக்குகளை அடைய எஸ் ஐ பி சிறந்த வழிமுறையாக இருக்கும். எனினும் சரியானதொரு ஃபண்டினை தேர்தெடுக்க சரியான ஆலோசகரை அணுகி பேசலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which types of mutual funds can you invest in to make your children’s education dreams come true?

Planning for a child’s education is one of the unavoidable responsibilities in investment plans. What kind of investments can be made?

Story first published: Tuesday, September 13, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.