உசிலம்பட்டியில் சந்தை கடைகளை பூட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர்: பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

உசிலம்பட்டி: மதுரைக்கே மல்லிகை பூக்களை அதிகம் உற்பத்தி செய்யும் பகுதியாக உசிலம்பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் விளையும் பூக்களை உசிலம்பட்டி பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வணிக வளாக கடைகளில் இயங்கி வந்த பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய கடைகளை ஏலம் விடுவது தொடர்பாகவும், ஏலம் எடுத்தவர்களுக்கு கடைகளை கையகப்படுத்தி ஒப்படைக்கும் நோக்கத்திலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் பூ மார்க்கெட் உள்ளிட்ட சுமார் 240 கடைகளை இன்று அடைத்து சீலிட்டனர்.

இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பூக்களை விற்பனை செய்யும் பூ விவசாயிகளும், பூக்களை வாங்கி செல்லும் வியாபாரிகளும் அவதிப்பட்டனர். மேலும் இந்த பூ மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான கிலோ பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பூக்களை கொண்டு வந்த விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்தினர் வைத்த தடுப்புகளை அகற்றிவிட்டு  தற்போது பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.