சென்னை
:
ஆதித்ய
கரிகாலனாக
நடித்துள்ள
விக்ரம்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
ஒரு
பதிவை
பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம்
இயக்கத்தில்
உருவாகியுள்ள
‘பொன்னியின்
செல்வன்’
படத்தின்
டிரைலர்
வெளியானதிலிருந்து
படத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
பல
மடங்காக
அதிகரித்துள்ளது.
இப்படத்தில்,
விக்ரம்,
கார்த்தி,ஜெயம்ரவி,
பார்த்திபன்,
பிரகாஷ்
ராஜ்,
ஜெயராம்
ரமேஷ்,விக்ரம்
பிரபு,
சரத்குமார்,ஜெயசித்ரா,
ஐஸ்வர்யா
ராய்,
த்ரிஷா,
ஐஸ்வர்யா
லக்ஷ்மி
ஆகியோர்
நடித்துள்ளனர்.
பொன்னியின்
செல்வன்
அமரர்
கல்கியின்
வரலாற்று
புனிதமான
பொன்னியின்
செல்வன்
திரைப்படத்தை
அதே
பெயரில்
இயக்குநர்
மணிரத்தினம்
இயக்கி
உள்ளார்.
கல்கியின்
எழுத்தில்
விழிகளை
விரியவைத்து
பரசவமூட்டிய
காட்சியை
திரையில்
காண
தமிழ்
திரையுலகம்
மட்டுமில்லாமல்
ஒட்டுமொத்த
இந்தியாவுமே
எதிர்பார்த்து
காத்திருக்கிறது.

500
பட்ஜெட்
கிட்டத்தட்ட
500
கோடி
பட்ஜெட்டில்
லைகா
ப்ரெடக்ஷன்ஸ்
உடன்
இணைந்து
மணிரத்னத்தின்
மெட்ராஸ்
டாக்கீஸ்
இந்த
படத்தை
தயாரித்து
முடித்துள்ளது.
செப்டம்பர்
30
ம்
தேதி
இப்படத்தின்
முதல்
பாகம்
வெளியாக
உள்ளது.
சமீபத்தில்
வெளியான
இப்படத்தின்
டிரைலர்,
இப்படத்தின்
மீதான
ஆவலை
மேலும்
தூண்டி
உள்ளது.

பண்டையகால
கருவி
பொன்னியின்
செல்வன்
படத்தில்
ஏ.ஆர்.ரஹ்மான்
இசை
பெரிதும்
பேசப்படுகிறது.
சோழர்
காலத்து
கதை
என்பதால்,
பண்டையக்காலத்து
இசை
கருவிகளான
பாம்பை,
உடுக்கை,உறுமி,
தம்பட்டம்,
கொம்பு,
பஞ்சமுக
வாத்தியம்
உட்பட
பல
இசைக்கருவிகள்
இப்படத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதல்
பாகத்தில்
6
பாடல்கள்,
இரண்டாம்
பாகத்தில்
6
பாடல்கள்
என
மொத்தம்
12
பாடல்கள்
இடம்பெற்றுள்ளன.

எட்டு
திக்கும்
புலிக்கொடி
இந்நிலையில்,
பொன்னியின்
செல்வன்
திரைப்படத்தில்
ஆதித்ய
கரிகாலனாக
நடித்துள்ள
விக்ரம்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்,
சரி.
தஞ்சைக்கு
வருகிறேன்.
எட்டு
திக்கும்
புலிக்கொடி
நாட்டும்
திரைப்பயணம்
தொடங்கும்
முன்
பெருவுடையாரின்
ஆசி
வேண்டுமல்லவா?
குந்தவை,
உடன்
வருகிறாயா?
வந்தியத்தேவன்
வருவான்.
என்ன
நண்பா,வருவாய்
தானே?
அப்படியே
அந்த
அருண்மொழியையும்
இழுத்து
வா
என
பதிவு
செய்துள்ளார்.
இவர்
தஞ்சாவூர்
கோவிலுக்கு
போவதைத்தான்
இப்படி
குறிப்பிட்டுள்ளார்.