உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராண்ட்பேன்ட் சேவை மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது.
குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போர் காலத்தில் எலான் மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் சேவை பெரிய அளவில் உதவியது.
இதே ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அளிக்க வேண்டும் என ஆர்வமாக வந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தடுத்துத் தடைகள் மூலம் தற்போது மொத்தமாக வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் இதே சேவையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அளிக்க உள்ளது.
குஜராத் சுபலட்சுமி நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ்-க்கு அடித்த ஜாக்பாட்..!

செயற்கைகோள் பிராண்ட்பேன்ட்
எவ்விதமான கேபிள் இணைப்பும் இல்லாமல் செயற்கைக்கோள் மூலம் பிராண்ட்பேன்ட் இணைப்பை அளிக்கும் சேவையை இந்தியாவில் வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல்-க்குப் போட்டியாக இப்பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவும் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ
இச்சேவைக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio Satellite Communications Ltd (JSCL) என்ற தனி நிறுவனத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மூலம் டெலிகாம் துறையிடம் குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன்ஸ் பை சேட்டிலைட் சர்வீசஸ் லைசென்ஸ் பெற விண்ணப்பம் கொடுத்து இருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ – ஏர்டெல் ஒன்வெப்
இந்தியாவில் செயற்கைகோள் வாயிலாக இண்டர்நெட் இணைப்பு அளிக்க மத்திய அரசின் டெலிகாம் துறை ஒப்புதல் அளித்த 2வது நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. முதல் நிறுவனம் நாட்டின் 2வது பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் முதலீட்டில் இயங்கும் ஓன்வெப். எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் விதிமுறை மீறியதன் காரணமாக வெளியேறியது.

முகேஷ் அம்பானி – ஆகாஷ் அம்பானி
2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் முகேஷ் அம்பானி ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் மற்றும் உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான லக்சம்பேர்க் நாட்டைச் சேர்ந்த SES நிறுவனத்துடன் இணைந்து 51:49 கூட்டணியில் ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை உருவாக்கியது.

ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி
இந்தியாவில் செயற்கைகோள் வாயிலாக இண்டர்நெட் சேவையை அளிப்பதற்காகவே இந்த ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை உருவாக்கியது.இத்தகையைச் சேவை இந்தியாவில் டெலிகாம் சேவை மட்டும் அல்லாமல் விண்வெளி ஆராய்ச்சி பிரிவிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Mukesh Ambani’s Reliance Jio gets DoT nod to start broadband from satellite
Mukesh Ambani’s Reliance Jio gets DoT nod to start broadband from satellite எலான் மஸ்க் இடத்தைக் கைப்பற்றப்போகும் முகேஷ் அம்பானி..!