அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று ரெய்டு நடத்தி வருகின்றனர். எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் புகார் எழுந்தது. அதனடிப்படையில் ரெய்டு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியள்ளது. அதன்படி கோவையில் உள்ள வேலுமணி வீடு உள்பட 9 இடங்கள் மற்றும் சென்னை, திருச்சி உள்ளிட்ட 26 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
ஏற்கெனவே, கடந்தாண்டு ஜூலை மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதம் ரெய்டு நடைபெற்றது. பொதுவாக வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு என்றால், சில சென்டிமென்ட்கள் தொடர்கின்றன. ரெய்டின்போது அங்குக் கூடும் அதிமுக தொண்டர்களுக்கு டீ, டிபன், ரோஸ்மில்க், ஸ்நாக்ஸ், மதிய உணவு கொடுத்துத் திணறடிப்பார்கள்.
இன்றும் ரெய்டு என்றதும், அதிமுக-வினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களுக்கு உணவும் தயாரானது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே கூட்டம் கூடுவதை போலீஸார் தடுத்து வந்தனர். ஒருகட்டத்தில் அங்கிருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், தொண்டர்களை கைது செய்தனர்.
அதேபோல வேலுமணி ரெய்டுக்கும், செவ்வாய்க்கிழமைக்கும் ஓர் தொடர்புள்ளது. இன்றுடன் சேர்த்து (13.9.22), இதற்கு முன்பு நடந்த ரெய்டுகள் (10.7.21, 15.3.22) அனைத்தும் செவ்வாய்க்கிழமையில் தான் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.