ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை.. ஊழியர்களை எச்சரிக்கும் இன்போசிஸ்!
ஐடி நிறுவனங்கள் பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என இரண்டு வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு இரண்டு இடங்களில் வேலை செய்வது ஒரு தெளிவான ஏமாற்று வேலை என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனமும் தங்களது ஊழியர்கள் நடத்தை விதிப்படி மூன் லைட்டிங் (moonlighting) என அழைக்கப்படும் இரண்டு வேலையைச் செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்.. எச்சரிக்கையா இருங்கப்பு..!

இன்போசிஸ் எச்சரிக்கை
இன்போசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ‘இரண்டு நேரமும் கிடையாது, இரவு வேறு வேலையும் கிடையாது’ மற்றும் ‘இரட்டை வாழ்க்கையும் கிடையாது’ என தெரிவித்துள்ளது. அதன்படி இன்போசிஸ் ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் நேரம் அல்லது வீட்டில் இருக்கும் நேரங்களில் வேறு நிறுவனங்களுக்கு வேலை செய்யக் கூடாது என எச்சரித்துள்ளது.

கொரோனா
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்தன. இப்போது தொற்று குறைந்த பல்வேறு நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் சில நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் ஃபரம் ஹோம் சேவைக்கு அனுமதி அளித்து வருகின்றன. அதை பயன்படுத்திக்கொண்டு பல ஊழியர்கள் தங்களது வேலைக்கு வெளியில் உள்ள தேவைகளை பயன்படுத்தி பகலில் ஒரு வேலை, இரவில் பகுதி நேரத்தில் ஒரு வேலை என செய்து வருகின்றனர்.

அலுவலகம் அழைக்கும் நிறுவனங்கள்
பொருந்தொற்று குறைந்த பிறகு பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் அழைத்தும் பலர் அதற்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை. சிலர் தங்களுக்கு ஃப்ரீலான்சிங் போன்ற சேவை மூலம் அதிகம் வருமான கிடைக்கிறது எனவே வேலையே வேண்டாம் என ராஜினாமாவும் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் சேவை தங்களுக்கு இரண்டு வருமானம் அளிக்க உதவுவதால் அலுவலகம் வர முடியாது. அல்லது வாரத்தில் ஓர் இரு நாட்கள் அலுவலகம், மீதம் உள்ள நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஹைபிரிட் முறையை கேட்கின்றனர்.

மூன் லைட்டிங்கிற்கு ஆதரவு வழங்கும் ஸ்விக்கி
இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தங்களது ஊழியர்கள், மூன் லைட்டிங் செய்யலாம். ஆனால் அதனால் தங்களது பணிகள், உற்பத்தி பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என ஆதரவும் தெரிவித்துள்ளது.

க்ரெட்
ஆன்லைன் நிதி சேவை நிறுவனமான க்ரெட்டும் தங்களது நிறுவன ஊழியர்கள் இரண்டு வேலைகளை செய்ய ஆதரவு அளித்துள்ளது. கொரோனா காலத்தில் வேலை இழந்த பலருக்கு ஃப்ரீலான்சிங் போன்ற சேவைகள் பெரும் பயனை வழங்கி வருகின்றன.
‘No two-timing, no moonlighting’ and ‘No double lives’: Infosys warns employees
‘No two-timing, no moonlighting’ and ‘No double lives’: Infosys warns employees