கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிடப்பட்டது.
