பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாயார் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான சிசிடிவி காட்சிகள்
மாணவி உயிரிழந்த அன்றே பள்ளி நிர்வாகத்துடன் தாய் செல்வி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவி ஸ்ரீமதியின் தாய் தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் வெளியாகியுள்ள ஆதாரம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சூலை 13ஆம் திகதி மாணவி உயிரிழந்த நிலையில், அன்று இரவு 7 மணியளவில் அவரது தாயார் செல்வி பள்ளி நிர்வாகத்துடன் பேசியதாக சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில் ஸ்ரீமதி தரப்பில் தாய் செல்வி உட்பட 9 பேர் இருந்துள்ளனர்.
முன்னதாக பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆதாரத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.