கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை படிங்க..!

கிரெடிட் கார்டு என்பது மிகச்சரியாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதும் சிறிது தவறாக பயன்படுத்தினாலும் அது உங்கள் வாழ்க்கையையே தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

கிரெடிட் கார்டை கூடுமானவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் ஒருவேளை பயன்படுத்தினால் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிரெடிட் கார்ட் பேமெண்டை EMI முறையில் கட்டலாமா? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

பர்ஸ்-ஐ ஓட்டையாக்க போகும் சக்திகாந்த தாஸ் முடிவு.. மக்களே உஷார்..!

கிரெடிட் கார்டு பேமெண்ட்

கிரெடிட் கார்டு பேமெண்ட்

கிரெடிட் கார்டு EMIகள் உங்கள் நிதிச் சுமையைக் குறைக்கும் என்பது உண்மைதான். ஏனெனில் முழுத் தொகையையும் செலுத்துவதற்கு பதிலாக, சில மாதங்களில் நீங்கள் நிலுவைத்தொகையை தவணைகளில் திருப்பிச் செலுத்துவது மிகவும் எளிது. உங்கள் கிரெடிட் கார்டு பில்லை EMI என மாற்றுவதற்கு முன் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

செயலாக்க கட்டணம்

செயலாக்க கட்டணம்

கிரெடிட் கார்டுகளில் உள்ள EMIகள் வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம் போன்ற சில கட்டணங்களுக்கு உட்பட்டவை. செயலாக்கக் கட்டணம் ஒரு முறை செலுத்தும் கட்டணம் ஆகும். கடன் காலத்துக்கு முன் உங்கள் EMIகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முடிக்க விரும்பினால் சில கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

சரியான தவணைக்காலம்
 

சரியான தவணைக்காலம்

பொதுவாக, கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள். இருப்பினும், நீண்ட காலத்தை தேர்வு செய்வதற்கு முன், அந்த காலகட்டத்தில் நீங்கள் செலுத்தும் வட்டியின் அளவை முதலில் கணக்கிட வேண்டும். தவணை காலத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்தால் வட்டி நஷ்டத்தை குறைக்கலாம்.

ரிவார்ட் புள்ளிகள்

ரிவார்ட் புள்ளிகள்

பொதுவாக, கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் EMI-களாக மாற்றப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்த ரிவார்டு புள்ளிகளையும் கூடுதல் தள்ளுபடிகளையும் வழங்க மாட்டார்கள். எனவே EMI முறையில் மாற்றுவதற்கு முன் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ரிவார்ட் புள்ளிகள் உங்களுக்கு தேவை என்றால் EMI முறையை தேர்வு செய்ய வேண்டாம்.

ரிவார்ட்-கேஷ்பேக்

ரிவார்ட்-கேஷ்பேக்

ஆனால் அதே நேரத்தில் HDFC பேங்க் மில்லினியா கிரெடிட் கார்டு அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஈஸ்மைட்ரிப் கிரெடிட் கார்டு போன்ற சில கிரெடிட் கார்டுகள், நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகளை EMI-களாக மாற்றினாலும் கூட கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் புள்ளிகளை வழங்குகின்றன. எனவே, நீங்கள் இதுபோன்ற கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால், EMI பரிவர்த்தனைகளுடன் மற்ற வெகுமதிகளையும் பலன்களையும் பெற்று கொள்ளலாம்.

மொத்த பரிவர்த்தனை

மொத்த பரிவர்த்தனை

நீங்கள் கிரெடிட் கார்டு EMI முறையை தேர்வு செய்யும் போது, ​​மொத்த பரிவர்த்தனை தொகையும் உங்கள் கிரெடிட் வரம்பில் இருந்து கழிக்கப்படும் என்றும், EMI தொகை மட்டும் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் EMI-களை செலுத்தும்போது, ​​உங்களுக்கு இருக்கும் வரம்பில் தொகை சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதித்திறன்

நிதித்திறன்

மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை கருத்தில் கொண்டு நீங்கள் EMIகளைத் தேர்ந்தெடுப்பதா? அல்லது மொத்தமாக செலுத்துவதா? என்பதை உங்களின் நிதி நிலைமையை ஆய்வு செய்து முடிவு செய்து கொள்ளலாம். உங்கள் நிதி திறன்களுக்கு ஏற்ப உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை நீங்கள் எப்போதும் உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலம் உங்களது பில்களை சரியான நேரத்தில் செலுத்தவும், கடன் சுழலுக்கு வழிவகுக்கும் அதிக நிதிக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தவிர்க்கவும் முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Keep in mind the following factors before opting for credit card EMIs

Keep in mind the following factors before opting for credit card EMIs | கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை படிங்க..!

Story first published: Tuesday, September 13, 2022, 15:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.