திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் அமைச்சரும், ஜனதா தளம் (எஸ்) கட்சி முன்னாள் தலைவருமான பேராசிரியர் என்.எம். ஜோசப் இன்று அதிகாலை மரணமடைந்தார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா அருகே உள்ள கடப்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்.எம். ஜோசப் (79). கேரள பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் தலைவராக இருந்தார். கடந்த 1987ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் பூஞ்ஞார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 1987 முதல் 91 வரை இ.கே. நாயனார் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார். ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஜோசப் உயிரி ழந்தார். நாளை அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.