புவனேஸ்வர்: மறைந்த பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் கிரீடத்தில் ஜொலிக்கும் கோகினூர் வைரம் ஒடிசாவின் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என்று ஜெகன்னாத் சோனா அமைப்பு கூறியுள்ளது. மேலும் பின்னணியில் உள்ள விபரத்தை கூறி கோகினூர் வைரத்தை மீட்டு தர வேண்டும் எனக்கூறி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பிரிட்டன் மகாராணியாக 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏரியவர் தான் 2ம் எலிசபெத். இவர் 70 ஆண்டுகள் வரை பிரிட்டன் மகாராணியாக இருந்த நிலையில் கடந்த 8 ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் காலமானார்.
96 வயதில் மறைந்துள்ள பிரிட்டன் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் லண்டனில் நடைபெற உள்ள நிலையில் பலநாட்டு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோகினூர் வைரம் பற்றிய விவாதம்
இந்நிலையில் தான் பிரிட்டன் மகாராணியில் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரம் தொடர்பான விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. மகாராணி 2ம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகி உள்ளார். விதிகள்படி 105 காரட் வைரம் சார்லஸின் மனைவியான கமிலா வசம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சொந்தம்
இந்நிலையில் பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்துள்ளதால் கோகினூர் வைரத்தை அதன் தாயகமான இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு, கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரம் எப்படி பிரிட்டன் மகாராணி வசம் சென்றது என்பது பற்றியும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தர்சன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.
பிரிட்டன் சென்து எப்படி?
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கிற்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷா இடையே போர் ஏற்பட்டது. இதில் பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் நினைவாக பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரம் நன்கொடையாக அவர் அளித்தார். இதுதொடர்பாக உயில் மட்டும் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில் கோகினூர் வைரம் உடனடியாக கோவிலுக்கு ஒப்படைக்கப்டவில்லை. ரஞ்சித் சிங் 1839ல் மறைந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து அவரது மகன் துலீப் சிங்கிடம் இருந்து ஆங்கிலேயர்கள் பறித்து சென்றனர். இதுதொடர்பாக பிரிட்டன் மகாராணிக்கு கடிதம் எழுதியதாயதாவும், இதற்கு2016 அக்டோபர் 19ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பதில் வந்ததுள்ளது” என கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு கடிதம்
இந்நிலையில் தான் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‛‛கோகினூர் வைரம் ஜெகநாதருக்கு சொந்தமானது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வைரத்தை இந்தியா கொண்டு வர ஜனாதிபதி திரௌபதி முர்முவின் தலையீட வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்த வந்த கடிதத்தின் நகல் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒப்புதலுடன் சான்று
மேலும் மன்னராக இருந்த ரஞ்சித் சிங் இறப்பதற்கு முன்பு கோகினூர் வைரரத்தை பூரி ஜெகன்னாதருக்கு நன்கொடையாக அளித்ததற்கு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் ஒப்புதல் அளித்து சான்றளித்தனர். இதற்கான ஆதாரம் டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.