கோவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்சஒழிப்புத்துறையின் சோதனை நிறைவடைந்தது. புதுக்கோட்டை இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் காலை 6 மணி மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 8 மணி நேரமாக நடைபெற்றது.
