ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே குடியிருப்புகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் இங்குள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ரயில்வே பணியாளர்களுக்கு ரயில்வே குடியிருப்புகள் உள்ளது. மேலும் இந்த ரயில்வே குடியிருப்புகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்
டுள்ளது. ரயில்வே கிழக்கு மற்றும் மேற்கு பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பகுதியிலும் ரயில்வே குடியிருப்புகள் அமைக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் இங்குள்ள ரயில்வே குடியிருப்புகள் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதால் பல்வேறு கட்டிடங்கள் பாழடைந்து இடிந்து விழுந்து முட்புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.
இங்கு இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் சிலர் சமூகவிரோத செயலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு மேற்கு பகுதியில் உள்ள பால் அடைந்த ரயில்வே குடியிருப்பு ஒன்று தூக்கில் தொங்கி இறந்து அழுகிய நிலையில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இதுவரை அவர் யார் என்ற விவரம் புலப்படவில்லை.
மேலும் பகல் நேரங்களிலேயே சமூகவிரோதிகள் சிலர் மது, கஞ்சா உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கின்றனர்.
இதனால் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பாழடைந்த ரயில்வே குடியிருப்பு பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம் பாழடைந்துள்ள ரயில்வே குடியிருப்புகளை அகற்றி முட்புதராக காட்சியளிக்கும் இடங்களை தூய்மை செய்ய வேண்டும் என்றும், சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து போலீஸ் ரோந்து தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.