டிக்டாக்
பிரபலம்
சோனாலி
போகத்
மரணம்
கொலை
என
முடிவான
நிலையில்
மர்மத்தை
அறிய
அவரது
மரண
வழக்கு
விசாரணை
சிபிஐக்கு
மாற்றப்பட
உள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
சோனலி
போகத்
மரணத்தில்
அவர்
அருந்திய
பானத்தில்
விஷத்தை
கலந்து
கொடுத்ததாக
உதவியாளர்கள்
இருவர்
கைது
செய்யப்பட்டனர்.
ஓட்டல்
உரிமையாளர்,
போதை
பொருள்
சப்ளையரும்
கைது
செய்யப்பட்டுள்ளார்.
சோனாலி
போகத்
உடலில்
ஏகப்பட்ட
காயங்கள்
இருந்தது.
கொலை
என
பிரேத
பரிசோதனை
அறிக்கை
தெரிவித்திருந்தது,
அவர்
மரணத்தை
சிபிஐ
விசாரிக்க
அவரது
குடும்பத்தார்
ஏற்கெனவே
கோரிக்கை
விடுத்திருந்தனர்.
பிக்பாஸ்
பிரபலம்,
பாஜக
பிரமுகர்
2006
ஆம்
ஆண்டு
டிவி
தொகுப்பாளராக
அறிமுகமாகி
பின்னர்
பிக்பாஸ்
14
நிகழ்ச்சியில்
கலந்துக்கொண்டு
பிரபலமாகி,
டிக்டாக்
மூலம்
இந்தியா
முழுவதும்
பிரபலமானவர்
சோனாலி
போகத்.
இவர்
பின்னர்
அரியானா
மாநில
பாஜகவில்
இணைந்தார்.
அவருக்கு
கட்சியில்
மாநில
அளவில்
பொறுப்பும்
அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்
கடந்த
ஆகஸ்டு
மாதம்
கோவாவில்
படபிடிப்புக்காக
வந்த
இடத்தில்
திடீரென
மரணமடைந்தார்.
அவர்
மாரடைப்பால்
உயிரிழந்ததாக
உதவியாளர்கள்
சொன்னார்கள்.
விஷம்
கொடுத்து
கொல்லப்பட்ட
சோனாலி
கோவா
மருத்துவக்
கல்லூரியில்
நடைபெற்ற
பிரேத
பரிசோதனையில்
அவர்
உடலில்
பல
காயங்கள்
இருந்தது
தெரியவந்தது
அவர்
விஷம்
கொடுத்து
கொல்லப்பட்டிருந்ததும்
தெரியவந்தது.
அவரை
கொலை
செய்துள்ளார்கள்
என
சோனாலி
போகத்தின்
குடும்பத்தார்
குற்றஞ்சாட்டினர்,
சோனாலி
போகத்
உடன்
கோவாவுக்கு
சென்ற
சக்வான்
மற்றும்
வாசியை
போலீசார்
கைது
செய்தனர்.
பார்ட்டி
நடந்த
இடத்தில்
இருந்த
சிசிடிவி
காட்சியை
போலீஸார்
பார்த்தனர்.
அதில்
அவர்கள்
சோனாலியை
பலவந்தமாக
இழுத்துச்
செல்லும்
காட்சிகள்
பதிவாகியிருந்தன.
கொலை
நடந்ததன்
உண்மை
காரணம்
என்ன
சிபிஐ
விசாரணை
கேட்ட
குடும்பத்தார்
இதையடுத்து
பிடிபட்ட
இருவரிடமும்
போலீஸார்
நடத்திய
விசாரணையில்
அவர்கள்
தான்
சோனாலியை
கொன்றதாக
ஒப்புக்கொண்டனர்.
இருவரும்
சோனாலிக்கு
அவர்
அருந்திய
பானத்தில்
விஷம்
கலந்து
கொடுத்ததை
ஒப்புக்கொண்டனர்.
அதற்கு
முன்னர்
அவர்
அருந்திய
பானத்தில்
மெத்தாமாபைட்டின்
போதை
மருந்து
கலக்கப்பட்டதையும்
போலீஸார்
கண்டுபிடித்து
விசாரணையில்
உறுதிப்படுத்தினர்.
இறப்பதற்கு
முன்
சோனாலி
போகத்தை
தாக்கியுள்ளனர்
என்பதால்
பின்னணி
குறித்து
சிபிஐ
விசாரணை
வேண்டும்
என
அவரது
குடும்பத்தார்
கோரிக்கை
வைத்தனர்.
கொலைக்கு
பின்னால்
அரசியல்
உள்ளதா?
இந்நிலையில்
கைதான
இருவரது
ஒப்புதல்
வாக்குமூலம்
அவரை
கொலை
செய்தது
உறுதியாகியுள்ள
நிலையில்
மேலும்
திடுக்கிட
வைக்கும்
தகவலாக
அவருடன்
கோவாவிற்கு
வந்த
இருவரில்
ஒருவர்
அரியானா
மாநில
முன்னாள்
அமைச்சர்
ஒருவருக்கு
நெருக்கமானவர்
என்பதால்
விசாரணை
இன்னும்
சூடு
பிடித்தது.
ஏதோ
சதித்திட்டத்துடன்
தான்
சோனாலி
கோவாவிற்கு
அழைத்து
வரப்பட்டு
கொல்லப்பட்டுள்ளார்
என
அவரது
குடும்பத்தினர்
குற்றம்
சாட்டினர்.
சிபிஐ
விசாரணை
கோரிக்கை
வலுத்தது.
அரியானாவில்
புயலைக்
கிளப்பிய
சோனாலியின்
கொலை
ஹரியானாவை
சேர்ந்த
சோனாலி
கோவாவில்
மரணமடைந்ததால்
இரு
மாநிலம்
சம்பந்தப்பட்ட
வழக்கு
என்பதால்
கோவா
முதல்வர்
சோனாலி
கொலை
சம்பந்தமாக
சிபிஐ
விசாரணைக்கு
உத்தரவிட
வேண்டும்
என
அவரது
குடும்பத்தார்
கோரியிருந்தனர்.
“மாநில
காவல்துறை
மீது
எங்களுக்கு
முழு
நம்பிக்கை
உள்ளது,
ஆனால்
சோனாலி
போகத்தின்
குடும்பத்தினரின்
கோரிக்கையை
ஏற்று
இந்த
வழக்கை
மாற்றுமாறு
மத்திய
உள்துறை
அமைச்சருக்கு
கடிதம்
எழுதுவேன்”
என்று
சாவந்த்
தெரிவித்திருந்தார்.
சிபிஐக்கு
மாற்றம்
இந்நிலையில்
சோனாலி
போகத்தின்
குடும்பத்தார்
வைத்த
கோரிக்கை
ஏற்று
கோவா
முதல்வர்
பரிந்துரை
அடிப்படையில்
மத்திய
அரசு
சிபிஐ
விசாரணைக்கு
உத்தரவிட
உள்ளதாக
அதிகாரபூர்வமற்ற
தகவல்
வெளியாகியுள்ளது.
பெரும்பாலும்
இரு
மாநிலம்
சம்பந்தப்பட்ட
திரையுலக
பிரபலம்
கொலை
வழக்கு
என்பதால்
நிச்சயம்
சிபிஐ
விசாரணை
வர
வாய்ப்பு
அதிகம்.