வேகமாக மாறி வரும் உலகில், வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது முக்கிய விவாத பொருளாக மாறியிருப்பது Quiet Quitting கலாச்சாரம் மற்றும் Moonlighting, இதில் இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலியாக்க மாறியிருப்பது Moonlighting தான்.
ஊழியர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்கு Moonlighting பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. Moonlighting என்றால் என்ன..? அதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை..? Moonlighting-ஐ ஐடி நிறுவனங்கள் எதற்காக எதிர்கிறது..?
Moonlighting கொள்கையை விப்ரோ தொடர்ந்து இன்போசிஸ் எதிர்கிறது.
பெங்களூரில் கடும் டிராபிக்.. காரை விட்டு இறங்கி 3 கிமீ ஓடிய டாக்டர்.. என்ன காரணம்?
Moonlighting என்றால் என்ன
Moonlighting என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே வெளியில் வேறு நிறுவனத்தில் பணியாற்றுவது. இந்த Moonlighting கொள்கை வெளிநாடுகளில் வேகமாகப் பிரபலமாகி வரும் நிலையில், இந்தியாவில் ஸ்விக்கி உட்படப் பல நிறுவனங்கள் இந்தக் கொள்கையை ஏற்றுத் தனது நிறுவனத்தின் பணியாற்றும் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பிற நிறுவனத்திற்குப் பணியாற்ற அனுமதித்துள்ளது.
ரிஷாத் ப்ரேம்ஜி
இந்த நிலையில் இக்கொள்கையை விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி cheating என அறிவித்து டிவிட்டர் பதிவு போட்ட நிலையில், விப்ரோ Moonlighting கொள்கைக்கு எதிரானவை எனத் தெரிந்துகொண்ட ஐடி ஊழியர்களுக்கு இன்போசிஸ் எச்சரிக்கை தூக்கி வாரிப்போட்டு உள்ளது.
Moonlighting கொள்கை
உலகம் முழுவதும் டெக் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் நிலையில் ஊழியர்கள் கூடுதலான பணத்தைச் சம்பாதிக்கவும், அதேநேரத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளில் எவ்விதமான பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த Moonlighting கொள்கை.
டெக் ஊழியர்கள்
இந்தக் கொள்கை இல்லாமலே தற்போது பல டெக் ஊழியர்கள் ஃப்ரிலான்ஸ் முறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் இன்போசிஸ் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் கோபத்துடனும், சோகத்துடனும் உள்ளனர்.
இன்போசிஸ்
யாராவது இரண்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தால் ஊழியர் மீது ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என இன்போசிஸ் No Double Lives என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லாக்டவுன்
மேலும் இந்த லாகட்வுன் காலத்தில் ஃபரீலான்ஸ் சந்தையில் அதிகப்படியான திட்டங்கள் குவிந்த நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் ஒன்ருக்கு இரண்டு வேலையைப் பார்த்து உள்ளனர். இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடந்துள்ளது, இதன் வாயிலாகவே Moonlighting கொள்கை வெளியானது.
Infosys may terminate IT employees if found dual employment
Infosys warns their IT employees may terminate if found dual employment