தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு செல்லும் ஆதித்த கரிகாலன் – நடிகர் விக்ரம் ட்வீட்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் விக்ரம் “சரி தஞ்சைக்கு வருகிறேன்..பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா” என்று தஞ்சைக்கு சென்று தஞ்சை பெருவுடையாரை தரிசிக்க இருப்பதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பெருங்கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பல வருடங்களின் போராட்டத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் பெரும் முயற்சியில் தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ல் தொடங்கிய படப்பிடிப்பு கொரோனா பெருந்தொற்று காலங்களையும் தாண்டி தடைபடாமல் தொடர்ந்து 4 வருடங்களாக எடுக்கப்பட்டு தற்போது பட ரிலீசுக்கு காத்திருக்கிறது.

image

வரும் செம்படம்பர் 30ஆம் தேதி உலகம் எங்கிலும் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு முன் படத்தின் டிரெயலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று மக்கள் படத்தின் வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கின்றனர்.

image

இந்நிலையில் படம் வெளியீட்டுக்கு முன் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சென்று தரிசிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் டிவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! @Karthi_Offl @actor_jayamravi @trishtrashers pic.twitter.com/6JW2s8cfK8
— Chiyaan Vikram (@chiyaan) September 13, 2022

விக்ரம் பதிவிட்டுள்ள அந்த பதிவில், ” சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?
குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.
என்ன நண்பா,வருவாய் தானே?
அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! ” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.