தடுமாறி வரும் தங்கம் விலை.. இனி குறையுமா.. மீண்டும் அதிகரிக்குமா?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்பட்டாலும், அது பெரியளவில் சரிவினைக் காணவில்லை. இது டாலரின் மதிப்பு தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை.

இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்க தரவினையொட்டி, எப்படி வருமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனி எப்படியிருக்கும்?

பணவீக்க தரவு

பணவீக்க தரவு

அமெரிக்காவின் பணவீக்க தரவானது இன்று வெளியாகவிருக்கும் நிலையில், அது எப்படி வருமோ என்ற பலத்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பானது ஆக்ஸ்ட் 26ல் இருந்து பார்க்கும்போது டாலரின் மதிப்பு சரிவில் காணப்படும் நிலையில், இது மற்ற கரன்சி தாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது.

வட்டி விகிதம் அதிகரிப்பு?

வட்டி விகிதம் அதிகரிப்பு?

அமெரிக்க மத்திய வங்கியானது ஏற்கனவே வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்று வெளியாகவிருக்கும் பணவீக்க தரவானது, மேற்கொண்டு வட்டி வகித மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம். ராய்ட்டர்ஸ் ஆய்வில் நிபுணர்கள் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிக வட்டி
 

அதிக வட்டி

பாதுகாப்பு புகலிடமாக இருந்து வரும் தங்கம் விலையானது, வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் பெரிதும் குறையலாம். இது மேற்கொண்டு முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளின் முடிவால் கச்சா எண்ணெய் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கம் மேற்கொண்டு அதிகரிக்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 7.35 டாலர்கள் குறைந்து, 1733.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.10% குறைந்து, 19.642 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 12th September 2022: gold prices edges higher on softer dollar

Gold prices are slightly lower in the international market. It is expected to have an impact in the Indian market as well.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.