அவனியாபுரம்: மதுரை, சிந்தாமணியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (57). தமிழ்நாடு காவல்துறையில் தனிப்பிரிவு எஸ்ஐயாக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி. இவரது 5 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் அருகருகே வசித்து வருகின்றனர். ரமேஷ்பாபு, மறைந்த தனது தாய், தந்தையை போற்றும் வகையில் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து, சிலை வைக்க முடிவெடுத்தார். இதற்காக தனது வீட்டருகே தந்தை பொன்னாண்டி, தாயார் மீனாம்பாள் ஆகியோர் நினைவில் ஒரு கோயில் எழுப்பினார். இந்த கோயிலில் தாய், தந்தை இருவரது சிலைகளையும் வடிவமைத்திருக்கிறார். மறைந்த தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு உறவினர்களோடு சேர்ந்து இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார்.
