இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு தொழில்துறை வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலையில் தொழில்துறை வளர்ச்சி 2.4 சதவீதம் என மிகவும் குறைவாக பதிவு செய்திருப்பது தொழில் துறையினருக்கு பாதகமான தகவலாக உள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் மற்றும் ஜூன் மாதம் நல்ல தொழில்துறை வளர்ச்சி இருந்த நிலையில் ஜூலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி காணும்.. எஸ்பிஐ-ன் சூப்பர் அப்டேட்!
இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி
இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி, தொழில்துறை உற்பத்தி குறியீட்டின்படி, ஜூன் மாதத்தில் 12.7 சதவீதமாக இருந்தது. ஆனால் அது ஜூலையில் 2.4 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது. செப்டம்பர் 12 அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி ஜூலையில் தொழில்துறை வளர்ச்சி விகிதம் நான்கு மாதங்களில் மிகக் குறைவு என தெரிய வருகிறது.
இன்னும் குறையுமா?
மே, ஜூன் மாதங்களை விட தொழில்துறை வளர்ச்சி ஜூலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சி இன்னும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டை மூழ்கடித்தாலும், இந்த ஆண்டு மே மாதம் தொழில்துறைக்கு சாதகமான மாதமாக மாறியது. ஆனால் ஒருசில காரணங்களால் சாதகமான அடித்தளம் குறைந்து தொழில்துறைக்கு பாதகமாக மாறிவிட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மற்றும் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களின் தொழில்துறை வளர்ச்சி குறித்து தற்போது பார்ப்போம்.
ஐஐபி வளர்ச்சி
ஜூலை 2022 – 2.4%
ஜூன் 2022 – 12.7%
ஜூலை 2021 – 11.5%
சுரங்கம்
ஜூலை 2022 – -3.3%
ஜூன் 2022 – 7.8%
ஜூலை 2021 – 19.5%
உற்பத்தி
ஜூலை 2022 – 3.2%
ஜூன் 2022 – 13.0%
ஜூலை 2021 – 10.5%
மின்சாரம்
ஜூலை 2022 – 2.3%
ஜூன் 2022 – 16.4%
ஜூலை 2021 – 11.1%
பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாடு
முதன்மை பொருட்கள்
ஜூலை 2022 – 2.5%
ஜூன் 2022 – 13.8%
ஜூலை 2021 – 12.4%
மூலதன பொருட்கள்
ஜூலை 2022 – 5.8%
ஜூன் 2022 – 29.1%
ஜூலை 2021 – 30.3%
இடைநிலை பொருட்கள்
ஜூலை 2022 – 3.6%
ஜூன் 2022 – 10.5%
ஜூலை 2021 – 14.6%
உள்கட்டமைப்பு பொருட்கள்
ஜூலை 2022 – 3.9%
ஜூன் 2022 – 9.3%
ஜூலை 2021 – 12.3%
நுகர்வோர் சாதனங்கள்
ஜூலை 2022 – 2.4%
ஜூன் 2022 – 25.1%
ஜூலை 2021 – 19.4%
நுகர்வோர் அல்லாத நீடித்தவை
ஜூலை 2022 – -2.0%
ஜூன் 2022 – 3%
ஜூலை 2021 – -2.3%
மின்சார, சுரங்க துறைகள் வீழ்ச்சி
ஜூலை மாதத்தில், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகள் அவற்றின் வளர்ச்சி விகிதங்களில் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்தன, சுரங்கத் துறை அதன் உற்பத்தியில் 3.3 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்தது.
Industrial growth shrinks to 4-month low of 2.4%, fails to meet estimates
Industrial growth shrinks to 4-month low of 2.4%, fails to meet estimates | தொழில்துறை வளர்ச்சி கடும் சரிவு.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு?