மும்பை: தனது பாட்டியின் பெயருடன் சேர்ந்து தனது பெயரை சபா ஆசாத் என்று நடிகை சபா கிரேவா மாற்றிக் கொண்டார். பாலிவுட் பாடகியும் நடிகையான சபா கிரேவா என்ற தனது பெயரை ‘சபா ஆசாத்’ என்று மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தை சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர்; எனது தாயார் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் இருவரும் மதத்தை பின்பற்றவில்லை.
ஆசாத் என்பது எனது பாட்டியின் புனைப்பெயர் என்பதால், சபா ஆசாத் என்று மாற்றிக் கொண்டேன். எனக்கு… இந்தப் பெயரின் அர்த்தம் பிடித்திருந்தது. சுதந்திரத்தை விரும்புவது என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வு. அதனால் இந்தப் பெயரையே பொதுவெளியில் நான் பயன்படுத்திக் கொள்வேன்’ என்றார்.