மதுரை : பிரதமர் மோடி பிறந்தநாளன்று நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டுவண்டி போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது. பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டி நடத்த கோரி ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிபாளரிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை என்று மனுதாரர் புகார் தெரிவித்தார்.
