வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: ” பீஹாரில் தனது துறையில் ஏராளமான திருடர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலைவனாக நான் இருக்கிறேன்” என அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சுதாகர் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை சேர்ந்த சுதாகர் சிங் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கைமூரில் நடந்த கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: விவசாயத்துறையில், திருட்டு செயல்களில் ஈடுபடாத ஒரு பிரிவு கூட கிடையாது. நான் அந்த அமைச்சகத்தின் பொறுப்பாளராக இருப்பதால், அவர்களுக்கு தலைவனாக இருக்கிறேன். எனக்கும் மேலே பல திருடர்கள் உள்ளனர். அரசு மாறினாலும், வேலை செய்யும் முறை மட்டும் மாறவில்லை.

மாநிலத்தில் தரமான நெல் உற்பத்தி செய்த விவசாயிகள், மாநில விதை கழகம் வழங்கிய, விதை நெல்லை வாங்கவில்லை. அங்கிருந்து, ஒரு சில காரணங்களுக்காக வாங்கிய சில விவசாயிகளும் அதனை பயிரிடவில்லை. விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்காமல், விதை நெல் கழகம் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை கொள்ளையடித்துள்ளது. இவ்வாறு சுதகர் சிங் பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement