பொன்னேரி: பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
