நாட்டின் அபிவிருத்திக்காகவும், பொருளாதார மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யொக்கயமா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று (12) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் குறித்து அங்கு கவனம் செலுத்தப்பட்டது.