ஊத்துக்கோட்டை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது . இதனால் நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோக்நாத் தலைமை தாங்கினார் . போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் சிவா , சீனிவாசன், துணை தலைமையாசிரியர் அரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை இன்ஸ்பெக்டர் ஏழுமலை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி திருவள்ளூர் சாலை, நேரு பஜார், நேரு சாலை என முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது பின்னர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஆன்ட்ஸ் , கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை மாணவர்கள் யாரும் பயன்படுத்த கூடாது இந்த போதை பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் தாக்கும் என இன்ஸ்பெக்டர் ஏழுமலை மாணவர்களிடம் அறிவுரை வழங்கினார். பின்னர் மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.