மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றுள்ளார். அப்பொழுது வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முத்துக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.