கடலூர் மாவட்டத்தில் மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்காததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் ஆண்டி குப்பம் பகுதியை சேர்ந்த காசி என்பவரது மகன் வினோத்குமார் (27). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், மது குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் தாய் பணம் கொடுக்க மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினோத் குமாரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கடலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வினோத்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.