
மாமன்னன் படப்பிடிப்பில் பிறந்தநாள்: வடிவேலு உற்சாகம்
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் மாமன்னன். இதனை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது சேலத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலுக்கு நேற்று பிறந்த நாள். இதனை பட குழுவினர் கொண்டாடினார்கள். வடிவேலுக்கு ஆளுயர மாலை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த நிகழ்வில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி தமிழ் குமரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.